சென்னையில் 16 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி கட்டுமா திமுக?

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், ஒரு தொகுதியைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
சென்னையில் 16 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி கட்டுமா திமுக?
சென்னையில் 16 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி கட்டுமா திமுக?

சென்னை: சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், ஒரு சில தொகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் திமுக வெற்றி பெற்றுவிட்டது. ஒரு தொகுதியைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

1. ஆர்.கே. நகரில் திமுக வேட்பளார் ஜே.ஜே.எபினேசர்,
2. பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர்,
3. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,
4. வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் அ. வெற்றிஅழகன்
5. திருவிக நகரில் திமுக வேட்பாளர் தாயகம் கவி,
6. எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இ. பரந்தாமன்
7. ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் இரா. மூர்த்தி,
8. தியாகராயநகர் தொகுதியில்  திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதியும் 
9. ஆயிரம் விளக்கு - திமுக வேட்பாளர் எழிலன்,
10. மயிலாப்பூரில் த. வேலு,
11. சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்ரமணியமும்,
12. விருகம்பாக்கத்தில் திமுக வேட்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜாவும்
13. அண்ணாநகரில் திமுக வேட்பாளர் எம்.கே. மோகனும்,
14. வேளச்சேரியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.எம்.எச். ஹஸனும் முன்னிலையில் உள்ளனர்.

இதுவரை திமுகவின் கோட்டையாக இருந்த துறைமுகம் தொகுதியில் 12.30 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் பி.கே. சேகர்பாபு பின்னடைவை சந்தித்துள்ளார். இங்கு பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் முன்னிலையில் உள்ளார்.

தற்போது நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்த நிலவரம் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com