மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 7 ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 7 ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் வருகிற மே 7 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) அவர் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மே 4 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோன்று கரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
வெற்றிக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளார். அவரைக் காண கட்சித் தலைவர்கள் காத்திருக்கின்றனர். அறிவாலயத்துக்கு வந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, அவர் கோபாலபுரம் சென்று அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...