ஆட்சியமைக்க மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்
தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.


தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டுமே தனித்து 125 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இதையடுத்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். முன்னதாக, நேற்று நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (மே 5) காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
திமுகவின் 125 சட்டப்பேரவை உறுப்பினா்களும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 உறுப்பினா்கள் என 133 பேரின் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்தார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர், பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன்பின்னர் தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முறைப்படி திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-இல் எளிமையாக நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...