தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் ஆக்சிஜன் சிலிண்டர் விரைவில் நிறுவப்படும்: ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் விரைவில் நிறுவப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.

News image

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்.

Updated On :5 மே 2021, 12:12 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் விரைவில் நிறுவப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் புதன்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 250 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படுவதை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர்  ஆட்சியர் கூறியதாவது:

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் தற்போது 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவப்பட்டுள்ளது. இதில் ஆக்சிஜன் தீர தீர நிரப்பிக் கொள்ளலாம். இது மட்டுமின்றி தற்போது கூடுதலாக மேலும் ஒரு திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் விரைவில் நிறுவ அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்.

இதன் கொள்ளளவு 10 ஆயிரம் லிட்டராக இருக்கும். காய்ச்சல் பரிசோதனை முகாம்களையும், தடுப்பூசி முகாம்களையும் அதிகப்படுத்தி வருகிறோம். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் காஞ்சிபுரம் நகர் பகுதிகளில் அதிக அளவில் கரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. மக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில்தான் கரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது. கரோனா தொற்றின் முதல் அலையை விட 2வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கரோனா பரவல் தொடர்பான அரசு விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,025 கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதில் 1,558 பேர் குணமடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தில்  613 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. இவற்றில் 466 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 147 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாகவே உள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் 375 படுக்கைகள் உள்ளன. இதில் 250 ஆக்சிஜன் படுக்கைகளாகவும் உள்ளது. இதுபோதாதென்று மேலும் 50 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டு ஒரிரு வாரங்களில் திறக்கப்படும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளோடு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு கையிருப்பு உள்ளது. அதிகமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதால் மருந்துகளை தீரத்தீர வாங்கிக் கொள்கிறோம். செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் விரைவில் தற்காலிக செவிலியர்களை பணிக்கு அமர்த்தவும் தயாராகி வருவதாகவும் ஆட்சியர் மகேஸ்வேரி ரவிகுமார் தெரிவித்தார்.

ஆட்சியரது ஆய்வின் போது சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜீவா,கண்காணிப்பாளர் ஆர்.கல்பனா ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.