ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தவறு செய்தால் பணி நீக்கம்: அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
தவறு செய்தால் பணி நீக்கம்: அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
Updated On :10 மே 2021, 12:34 pm

DIN


சென்னை: அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

தொகுதிக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், தங்கள் துறையின் நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும். பல எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், அமைச்சர்களாக இருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகச் சிறப்பாக செயல்பட்டு, அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ளவும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.