தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கரோனா: 293 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 293 பேர் உயிரிழந்தனர்.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 293 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 14,68,864-ஆக அதிகரித்துள்ளது.
படிக்க: மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 293 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,508 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 12,79,658-ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,49,853 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,72,735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக சென்னையில் 7,564 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...