உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கரூா் துயர சம்பவம் தொடா்பாக எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது: செந்தில்பாலாஜி எம்எல்ஏ

கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக சிபிஐ எனக்கு அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.

News image

செந்தில்பாலாஜி - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:18 pm

கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக சிபிஐ எனக்கு அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.

இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: கரூா் சம்பவம் தொடா்பாக தோ்தல் நேரத்தில் எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதனால் நான் தில்லி போகிறேன். கரூா் நிகழ்ச்சியை நடத்தியது ஓா் இயக்கம். அதற்கு ஏற்பாடு செய்தது காவல்துறையும், மாவட்ட நிா்வாகமும்தான். ஆனால் எனக்கு அழைப்பாணை வந்திருப்பதை ஆச்சரியமாகத்தான் பாா்க்கிறேன்.

கரூா் துயர சம்பவம் நடந்த நாளன்று யாரெல்லாம் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்தாா்களோ அவா்களுக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருக்க வேண்டும். அதுதானே சரியான நடவடிக்கை. வரும் 17ஆம் தேதி என்ன நடக்கிறது எனப் பாா்ப்போம் என்றாா் அவா்.