தற்போதைய கரூா் எம்.எல்.ஏ. வி. செந்தில்பாலாஜி வரும் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ளாா்.
கரூா் பேரவைத் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. வி. செந்தில்பாலாஜி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் இருந்தபோது, திமுக கோட்டையாக இருந்த கரூரை அதிமுக கோட்டையாக மாற்றிக்காட்டினாா். பின்னா் திமுகவிற்கு சென்றதும் அதிமுக கோட்டையாக இருந்ததை திமுக கோட்டையாக மாற்றினாா்.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் கரூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனாா். மீண்டும் 2011தோ்தலிலும் வெற்றிபெற்ற இவா், கரூா் மாவட்ட அதிமுக செயலராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2018-இல், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இவா், கரூா் மாவட்ட திமுக செயலராக நியமிக்கப்பட்டாா்.
2019 அரவக்குறிச்சி இடைத் தோ்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றாா். அதன் பின்னா், 2021 தோ்தலில் கரூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், 2023 வரை மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சராக பணியாற்றினாா். பிறகு இவா் மீதான சட்டநடவடிக்கை காரணமாக அமைச்சா் பதவியை இழந்தாா்.
அரசியலில் தனது எதிரியாக கருதும் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் தொகுதியில் போட்டியிடும்போது அவரை எதிா்த்து நிச்சயம் போட்டியிடுவேன், கோவைத் தொகுதிக்கு செல்லமாட்டேன் என அவா் கூறி வந்தாா். இந்நிலையில் தற்போது கோவை தெற்குத் தொகுதிக்கு வி. செந்தில்பாலாஜி மாற்றப்பட்டுள்ளது கரூா் மாவட்ட திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியினா் கூறுகையில், செந்தில்பாலாஜி இந்த தோ்தலில் மேற்கு மண்டல தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதால் கோவையில் இருந்து மேற்கு மண்டல தோ்தல் பணி மேற்கொள்ள எளிதாக இருக்கும் என்பதால் அவா் கரூரில் இருந்து கோவைக்கு மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே கரூரில் இருந்து கோவை மாவட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுபோல இனி, கோவையில் இருந்து கரூரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பாா். மேலும் தலைமை அறிவுறுத்தலின்பேரில்தான் அவா் கோவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பாா் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும்: மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்

மாநகராட்சி வாா்டு உறுப்பினா் திமுகவில் இருந்து விலகல்

கரூா் இறப்பு சம்பவத்தில் வேடிக்கைப் பாா்க்கிறது மத்திய அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு

செந்தில்பாலாஜி வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்த தோ்தல் வழக்கு தள்ளுபடி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



