மேலும், போக்குவரத்துத் துறையை சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. போக்குவரத்து துறையின் செலவீனங்களை குறைத்து வருவாய் அதிகரித்தல், சுகாதார வழிமுறைகளை பேருந்துகளில் சீராக கடைபிடித்தல், 14 -ஆவது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 'நிர்பயா' திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல் , கிராம புறங்களில் பேருந்து தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பேருந்து இயக்கம். துறையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது, எங்கெல்லாம் உணவுக்காக பேருந்துகளை நிறுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வுக்கூட்டம் போக்குவரத்து துறை அதிகாரிகளிடளுடன் காலையும், போக்குவரத்து ஆணையர், இணை ஆணையர்கள், ஆர்டிஓக்களை அழைத்து அவர்கள் கீழுள்ள துறைகளில் உள்ள பிரச்சனை, எத்தனை பேருந்துகள், ஆட்டோக்கள் வருகிறது, எதுபோன்ற பிரச்னை உள்ளது, எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து மதியமும் சென்னை பல்லவன் இல்லத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.