ஓபிஎஸ் சகோதரர் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு அதிமுகவினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
'அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த நிலையில் மரணமடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன்.
தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். பாலமுருகனை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...