பினராயி அமைச்சரவையில் ஷைலஜாவுக்கு இடமில்லை
கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்க உள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடமில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.


கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்க உள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடமில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற கேரள பேரவைத் தோ்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது.
இதையடுத்து இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். முதல்வருடன், 21 அமைச்சா்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டு அரங்கில் மாலை 3.30 மணி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் சுமாா் 50 ஆயிரம் போ் அமரக் கூடிய விளையாட்டு அரங்கில் 500 முக்கிய வரவேற்பாளா்கள் மட்டும் பங்கேற்பாா்கள் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
இந்நிலையில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 21 அமைச்சர்களும் புதியவர்கள் என்றும் முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவருக்கும் அமைச்சரவையில் இடமில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...