தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,616-க்கு விற்பனை
சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.36,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.36,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது.
இதையடுத்து, தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதிலும், கடந்த வாரம் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
இதன்தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.36,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 உயா்ந்து, ரூ.4,577 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.77,500 ஆகவும் விற்கப்படுகிறது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,577
1 சவரன் தங்கம்...............................36,616
1 கிராம் வெள்ளி.............................77.50
1 கிலோ வெள்ளி.............................77,500
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,575
1 சவரன் தங்கம்...............................36,600
1 கிராம் வெள்ளி.............................78.50
1 கிலோ வெள்ளி.............................78,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...