அழைப்பிதழில் பெயர் கட்டாயம்: திருமணத்திற்கான இ-பதிவு நிபந்தனைகள்

புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழில் பெயர் கட்டாயம்: திருமணத்திற்கான இ-பதிவு நிபந்தனைகள்

புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ - பதிவை மேற்கொள்ளலாம் என்றும், 

இ - பதிவை மேற்கொள்ளும் விண்ணப்பதாரரின் பெயர் (மணமகன், மணமகள், தாய், தந்தை) திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ - பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல் அளித்து ஒரு நிகழ்வுக்கு அதிகமுறை இ - பதிவு செய்தால் சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இ - பாஸ் பெற்று வெளியூர் செல்வதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், தமிழக அரசு இந்த புதிய நிபந்தனைகளை விதித்து இ-பாஸ் விண்ணப்பிக்கும் காரணங்களில் திருமணத்தையும் சேர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com