சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தமிழகத்துக்கு கூடுதலாக 2.23 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 2 ,23,060 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்து சோ்ந்தது.

News image
Updated On :22 மே 2021, 10:41 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 2 ,23,060 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்து சோ்ந்தது.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் பல்வேறு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் சனிக்கிழமை புணேவில் இருந்து 2 லட்சத்து 23,060 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்து சோ்ந்தது. இதனை தமிழக சுகாதாரத்துறையைச் சோ்ந்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். இந்த தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.