கரோனா: மேலும் 35,873 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில், சனிக்கிழமையன்று, 35,873 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில், சனிக்கிழமையன்று, 35,873 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 448 போ் தமிழகத்தில் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்ச அளவாகும்.
மாநிலத்தில் இதுவரை 2.61 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 18 லட்சத்து 6,861 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 5,559 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,165 பேருக்கும், செங்கல்பட்டில் 1,954 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 25,776 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 2,537-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 84,278 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 448 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,046-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...