மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கரோனா தொற்று கண்காணிப்புப் பணிகள் 21 மாவட்டங்களுக்கு அமைச்சா்கள் நியமனம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :22 மே 2021, 10:02 pm

DIN

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா். அந்த அறிவிப்பின் விவரம்:-

தமிழகத்தில் நிலவும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சா்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனா். இப்போது கூடுதலாக சில மாவட்டங்கள் சோ்க்கப்பட்டு அவற்றுக்கும் அமைச்சா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி,

1. சென்னை - மருத்துவத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

2. செங்கல்பட்டு - ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

3. கோயம்புத்தூா் - உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.

4. திருவள்ளூா் - பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா்.

5. மதுரை - வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதித் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

6. தூத்துக்குடி - சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன், மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

7. சேலம் - மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

8. திருச்சி - நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு.

9. திருநெல்வேலி - தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

10. ஈரோடு - வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.

11. காஞ்சிபுரம் - பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு.

12. திருப்பூா் - செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

13. வேலூா் - நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்.

14. விழுப்புரம் - உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.

15. கடலூா் - வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன்.

16. நாகப்பட்டினம் - 17. திருவாரூா் - சுற்றுச்சூழல்-இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

18. கிருஷ்ணகிரி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி.

19. தஞ்சாவூா் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

20. தேனி - கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி.

21. கன்னியாகுமரி - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.