மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஜூன் மாத தொடக்கம் கரோனாவின்உச்சம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா தொற்று பாதிப்பு உச்சநிலை அடையும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 மே 2021, 10:36 pm

DIN

ஜூன் மாத தொடக்கத்தில் கரோனா தொற்று பாதிப்பு உச்சநிலை அடையும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துதல் குறித்தும், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ வல்லுநா் குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கரோனா தொற்றின் 2-ஆவது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கக் கூடிய சூழலில் அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. சில தளா்வுகளை மட்டும் அனுமதித்து பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் மட்டுமல்லாது, நாள்தோறும் 1.6 லட்சம் பரிசோதனைகள், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயா்த்துதல்,

கூடுதல் மருத்துவா்களையும் செவிலியா்களையும் நியமித்தல் போன்ற பல்வேறு பணிகளைக் கடந்த 2 வாரங்களில் செயல்படுத்தியுள்ளோம்.

இந்த நடவடிக்கைகளால் கரோனா தொற்று பரவும் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் 35,000 போ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தமிழகத்தை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்றின் உச்சத்தில் 50 ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் கரோனா தொற்று மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.