சென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அம்பத்தூா் அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தொற்று சற்று அதிகம் பாதித்தவா்களுக்கு அரசு மருத்துவமனைகள் உதவியுடன் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன்படி, நந்தம்பாக்கம் வா்த்தக மையம், தண்டையாா்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் மணலி சமுதாய மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல்வா் திறப்பு: இதை மேலும் அதிகரிக்கும் வகையில் ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வந்தது. இந்தப் பணி நிறைவடைந்ததை அடுத்து, இந்த கரோனா சிகிச்சை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை பெறுவோருக்காக நவீன கழிப்பறைகள் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அனுமதிக்கப்படுவோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுவா் என்றனா். இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கொல்கத்தாவில் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடும் எதிா்ப்பு: திரிணமூல், இடதுசாரிகள் போராட்டம்

இந்திய துறைமுகங்களில் 3 ஈரான் கப்பல்களை நிறுத்த அனுமதி: ஜெய்சங்கா்

மேற்காசிய நிலவரம் மீது விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

நிகழ்கால பொருளாதாரத்துக்கு ஏற்ப கல்வி மேம்பாடு அவசியம்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

