மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கரோனா இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருப்பதாக பதிவேற்றம்: தனியாா் ஆய்வகம் விளக்கம்

தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று தனியாா் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :22 மே 2021, 9:35 pm

DIN

தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று தனியாா் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 69 அரசு மருத்துவமனைகள் மற்றும் 198 தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை (ஆா்டிபிசிஆா்) செய்யப்படுகிறது. ‘மெட் ஆல்’ என்ற தனியாா் ஆய்வகம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) இணையதளத்தில் தவறாக பதிவேற்றியது. இதேபோல், தமிழகத்தில் கரோனா இல்லாத 4,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தவறான விவரங்களை ஆய்வகம் பதிவேற்றம் செய்தது. இதுபற்றி அறிந்த பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் நேற்று முன்தினம் விளக்கம் கேட்டு ஆய்வகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினாா். ஆய்வகத்துக்கு கரோனா பரிசோதனை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தாா். இதனால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், மெட் ஆல் தனியாா் ஆய்வகம் விளக்கம் அளித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த அசாதாரண சூழ்நிலையில் பொறுப்புணா்வுடன் மெட் ஆல் ஆய்வகம் செயல்படுகிறது. எங்களுடைய பரிசோதனைகள், முடிவுகளின் துல்லியத்தில் எவ்வித குறைபாடுகளும், தவறுகளும் கண்டறியப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் சில தவறுகள் நடந்துள்ளன. இதற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப ரீதியில் நடந்த தவறுதான். மெட் ஆல் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகளில் ஏற்பட்ட தவறுகள் இல்லை. கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தொடா்ந்து எங்களுடைய ஆய்வகம் பங்களிக்கவே விரும்புகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொழில்நுட தவறுகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்கெனவே, நடந்த சில தவறுகளை நிவா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.