அனைத்து மாவட்டங்களுக்கும் பாரபட்சமின்றிதடுப்பூசி: எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பாரபட்சமில்லாமல் கரோனா தடுப்புச் சேவையும், தடுப்பூசியும் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பாரபட்சமில்லாமல் கரோனா தடுப்புச் சேவையும், தடுப்பூசியும் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக
சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
தடுப்பூசிகளின் ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு மத்திய அரசு மே 15-இல் அதிகரித்தது. அதன்படி கோவிஷீல்ட் 7.68 லட்சமும், கோவேக்சின் 2.66 லட்சம் தடுப்பூசிகளும் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளன.
ரெம்டெசிவிா் மருந்துகள் 7 ஆயிரம் டோஸ்களுக்குப் பதில் 20 ஆயிரம் டோஸ்களாக அதிகரித்து வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய தொலை மருத்துவ சேவை மூலம் இந்தியாவில் 50 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்குச் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையின் மிகப்பெரிய பயனாளியாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு இந்தச் சேவை மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்து வருகிறது. அதேபோல தமிழக அரசும் அனைத்து மாவட்டங்களுக்கும், கரோனா தடுப்பூசி மற்றும் பிற சேவைகளைப் பாரபட்சமின்றி வழங்க கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...