கரோனா தடுப்புப் பணிகளுக்காக மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு
கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து மேலும் ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து மேலும் ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதவியேற்ற முதல் நாள் முதல், போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டு, மக்களின் உயிர்களைக் காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் முதல்வர், தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று 11-5-2021 அன்று வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
இன்று (23-5-2021) வரை மொத்தமாக 181 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வரின் வேண்டுகோளையேற்று, கரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள தொகையிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட முதல்வர் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.
இதனையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, இந்த ஒரு வார காலத்தில் நன்கொடையாளர்கள் அனைவரும் நேரில் வந்து தன்னிடம் நன்கொடை அளிப்பதை தவிர்க்குமாறும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இணைய வழியில் (https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html) இந்த நன்கொடைகளை தொடர்ந்து அளிக்குமாறும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...