தம்மம்பட்டியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!
தம்மம்பட்டியில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க, சமூக இடைவெளியின்றி கடைகள்தோறும் மக்கள் குவிந்தனர்.


தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க, சமூக இடைவெளியின்றி கடைகள்தோறும் மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க கடந்த 10 ஆம் தேதி முதல் நாளை வரை சில தளர்வுகளுடன் அரசு ஊரடங்கை அறிவித்தது. இந்நிலையில், நாளை (திங்கள்கிழமை) முதல் வரும் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
அதையடுத்து, நேற்றும், இன்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து அத்தியாவசியக் கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தம்மம்பட்டியில் நேற்று பிற்பகல் முதல் இரவு 9 மணி வரையும், இன்று காலை 5 மணி முதலே காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், கால்நடை தீவனக் கடைகள், இறைச்சி கடைகள், ஸ்நாக்ஸ் கடைகள் என, அனைத்துக் கடைகளிலும், ஒரு வாரத்திற்கு தேவையானவற்றை வாங்கி வைக்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் குவிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...