சென்னையில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காக்க இலவச தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


சென்னை மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காக்க இலவச தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி:
சென்னை மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை
பாதுகாக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் பெற்றோரின் குழந்தைகள், உணவு மற்றும் உறைவிடம் தேவைப்படும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் ஆலோசனை தேவைப்படும் குழந்தைகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் இருக்கின்ற குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூர்த்தி செய்ய சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைப்பேசி எண்.1098, சென்னை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் நல குழுவை கீழ்காணும் எண்களில் தொடார்பு கொள்ளலாம்.
மேலும் இதுபோன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை கண்டால் கீழ்காணும் முகவரியில் தொடார்பு கொள்ளலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்
1. மாவட்ட ஆட்சித்தலைவர் / தலைவர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.58, சூரியநாராயண சாலை,
இராயபுரம், சென்னை-13.
மின்னஞ்சல்: dcpschennai2@gmail.com
9944290306/044-25952450.
2. குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098.
3. குழந்தைகள் நலக் குழு (வடக்கு மண்டலம்) தலைவர் - 9840135503
4. குழந்தைகள் நலக் குழு (தெற்கு மண்டலம்) தலைவர் 9840083620
5. குழந்தைகள் நலக் குழு (மத்திய மண்டலம்) தலைவர் - 9841889069
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...