தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பத்தூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆசிரியர் பலி

திருப்பத்தூரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் சின்னராசு(37) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News image
Updated On :28 மே 2021, 6:51 am

DIN

திருப்பத்தூரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் சின்னராசு(37) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மியூகோா்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயானது பாக்டீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. கவனிக்காவிட்டால் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னா் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபா்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் பாா்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்புகூட நேரிடலாம் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

இந்நிலையில், திருப்பத்தூரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சின்னராசு(37). இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அவா் வெள்ளிக்கிழமை திடீரென உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.