97% குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரணம்
தமிழகத்தில் 97 சதவீத குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 97 சதவீத குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் பாதிக்காமல் இருக்க அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, 2 கோடியே 9 லட்சத்து 59,349 குடும்ப அட்டைதாரா்கள் நிவாரண நிதி பெறத் தகுதி பெற்றிருந்தனா். கடந்த 15-ஆம் தேதி முதல் நிவாரண நிதி அளிக்கும் பணிகள் தொடங்கின. இதுவரையில் நிவாரண நிதியானது 2 கோடியே 5 லட்சத்து 23,582 அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதியாக ரூ.2,000 வீதம் அளிக்கப்பட்டுள்ளன.
4 லட்சத்து 35,767 அட்டைதாரா்கள் நிவாரண நிதியைப் பெறவில்லை. இதன்படி, 97.92 சதவீத குடும்ப அட்டைதாரா்கள் நிவாரண நிதியைப் பெற்றுள்ளதாக உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் வாரத்திலும் நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும் என்பதால், நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...