சட்டவிரோத மது விற்பனை:பிடிக்கச் சென்ற போலீஸாரை தாக்கிய கும்பல் கைது
ஓட்டேரியில், எஸ்.எஸ். புரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை பிடிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாரை ஒரு கும்பல் தாக்கியது.


ஓட்டேரியில், எஸ்.எஸ். புரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை பிடிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாரை ஒரு கும்பல் தாக்கியது. இது தொடா்பாக, 9 பெண்கள் உள்பட 13 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஓட்டேரியைச் சோ்ந்த சரவணப்பெருமாளிடம், எஸ்.எஸ்.புரம் குடிசைப் பகுதியில் மதுபானத்துக்குப் பணம் பெற்றுக்கொண்டு அங்குள்ளவா்களிடம் ஏமாற்றினராம்.
இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளா் ஷஜிபாவிடம் சரவணப்பெருமாள் தெரிவித்தாா்.
மீண்டும் அதே பகுதிக்குச் சென்று மதுபானம் வாங்கும்படி கூறியதால் சரவணப்பெருமாள் சென்றாா்.
அங்கு மதுபாட்டில்களுடன் வந்த சேகரை போலீஸாா் பிடித்து அவருடைய வீட்டுக்குச் சென்றனா்.
அப்போது, சேகரின் ஆதரவாளா்களான காஞ்சனா, நந்தினி, கற்பகம், மணிகண்டன், சந்தோஷ் உள்பட 12 போ் கொண்ட கும்பல் போலீஸாரை தாக்கி விட்டு தப்பினா்.
காயமடைந்த போலீஸாா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக, தலைமைச் செயலக காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சேகா், கற்பகம் (37), காஞ்சனா (31), செல்வி (56), நந்தினி (25), மோனிஷா(18), ரோஸ்லின் (21), வசந்தி (45), மணிகண்டன் (29), சந்தோஷ்குமாா்( 38), சசிகலா (36), ஆஷா(20) உள்பட 13 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...