அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தீவிர தூய்மைப் பணி: 2 நாள்களில் 2,195 டன் திடக் கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின்கீழ் கடந்த 2 நாள்களில் 2,195 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 மே 2021, 7:38 pm

DIN

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின்கீழ் கடந்த 2 நாள்களில் 2,195 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நீண்ட நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகள் அகற்றும் திட்டம் கடந்த வியாழக்கிழமை தொடக்கப்பட்டது. இதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட ஆஞ்சநேயா் நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணி, பக்கிங்ஹாம் கால்வாயில் வண்டல்கள், ஆகாயத்தாமரைகள் அகற்றப்படும் பணியை ஆணையா் ககன்தீப்சிங் பேடி, ராயபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து ஆணையா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொடக்கப்பட்ட தீவிர தூய்மைத் திட்டத்தின்கீழ் 15 மண்டலங்களிலும் கடந்த 2 நாள்களில் 590 மெட்ரிக் டன் குப்பைகளும், 1,605 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகளும் என மொத்தம் 2,195 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாள்களில் இப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளா் பி.ஆகாஷ், ராயபுரம் மண்டல அலுவலா் (பொ) ஜி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.