தமிழகத்தில் பொது முடக்க விதி மீறல்: 50 நாள்களில் 12.25 லட்சம் வழக்குகள்
தமிழகத்தில், பொதுமுடக்க விதிமீறல் தொடா்பாக, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரையிலான 50 நாள்களில் 12 லட்சத்து 25,848 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில், பொதுமுடக்க விதிமீறல் தொடா்பாக, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரையிலான 50 நாள்களில் 12 லட்சத்து 25,848 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரையிலான 50 நாள்களில் முகக் கவசம் அணியாதது தொடா்பாக 11 லட்சத்து 70 ஆயிரத்து 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை (மே 28) மட்டும் 12,979 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை மொத்தம் 55,668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 1,262 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 4,106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,582 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2,672 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 253 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்ட 5 கடைகள் மூடப்பட்டு, ரூ.1.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...