ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா: ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News image

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Updated On :30 மே 2021, 8:03 am

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதால், தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, சனிக்கிழமை இரவு ஈரோடு வந்து தங்கிய முதல்வர் ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். 

  மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் 

  மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் 

அங்கு, கரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதியினைப் பார்வையிட்டார். மேலும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தலா 5 மருத்துவர்கள், 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளைப் பார்வையிட புறப்பட்டார். ஆய்வின்போது, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,  மக்களவை உறுப்பினர்கள் அ.கணேசமூர்த்தி, கே.சுப்பராயன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.