ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடப்படாது: ராதாகிருஷ்ணன்

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  (கோப்புப்படம்)
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது என்று கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது.

தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகளை ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com