தொண்டியில் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கரோனா சிகிச்சை முதலுதவி சிறப்பு மையம் சட்டபேரவை உறுப்பினர் கருமாணிக்கம் திங்கள் கிழமை திறந்து வைத்தார்
தொண்டியில் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கரோனா சிகிச்சை முதலுதவி சிறப்பு மையம் சட்டபேரவை உறுப்பினர் கருமாணிக்கம் திங்கள் கிழமை திறந்து வைத்தார்

தொண்டி: கரோனா முதலுதவி சிகிச்சை சிறப்பு மையம் திறப்பு

திருவாடானை அருகே தொண்டியில் 'அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா முதலுதவி சிகிச்சை மையம் திறப்பு விழா

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டியில் 'அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா முதலுதவி சிகிச்சை மையம் திறப்பு விழா சட்டபேரவை உறுப்பினர் கருமாணிக்கம் திறந்து வைத்தார். 

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக கரோனாவின் தாக்கம் இரண்டாவது அலை வெகு வேகமாக பரவி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் சிவகங்கை தேவகோட்டை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பல பேர் உயிரிழந்த நிலையில் கரோனோ பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் உதவியின்றி பெரும் பாலோர் பாதிப்புக்குள்ளாகியது இப்பகுதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் முதற்கட்டப் பணியாக தொண்டி பொதுமக்கள் ஆக்சிஜன்  வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் தொண்டியில் அமைக்க வேண்டும் என்று கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் பொதுமக்கள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.

மேலும் இந்த சிகிச்சை மையம் இங்கு அமைந்தால் கரோனா பாதிக்கபட்டவர்களுக்கு எளிதா சிகிச்சை அளிக்க முடியும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி சட்டபேரவை உறுப்பினர் கருமாணிக்கம் பொதுமக்களின் ஏற்பாட்டில் தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 படுக்கைகள் கொண்ட ஆக்சிசன் வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு மையம் திங்கள் கிழமை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர் கரு மாணிக்கம் ஒன்றியக்குழு தலைவர் முகமது முக்தார், ராமநாதபுரம் சட்டபேரவை உறுப்பினர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனை தொடர்ந்து சிறப்பு மையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் கரு மாணிக்கம் திறந்துவைத்தார். இதில் வட்டாட்சியர் செந்தில் வேல் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல்ஜாமியா வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், செவிலியர்கள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com