தீபாவளி: சென்னையிலிருந்து பேருந்துகளில் இதுவரை 2.35 லட்சம் மக்கள் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 2.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து பேருந்துகளில் இதுவரை 2.35 லட்சம் மக்கள் பயணம்
சென்னையிலிருந்து பேருந்துகளில் இதுவரை 2.35 லட்சம் மக்கள் பயணம்
Updated on
1 min read

தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 2.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு கூட்டநெரிசலின்றி மக்கள் செல்வதற்காக தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் திங்கள்கிழமைமுதல் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையிலிருந்து மட்டும் 5,932 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த பேருந்துகளில் கடந்த 2 நாள்களில் மட்டும் 2,34,918 பேர் பயணம் செய்துள்ளனர்.

தொடர்ந்து, சிறப்புப் பேருந்துகள் இன்று சொந்த ஊர்களுக்கு செல்ல 1,07,744 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com