மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சக்திமசாலா நிறுவனங்கள், நடுநகர் அரிமா சங்கம் சார்பில் 136 பேருக்கு தீபாவளி புத்தாடை

சக்தி மசாலா நிறுவனங்கள் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏழை, எளியோர் 136 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

News image

சக்தி மசாலா நிறுவனங்கள்,ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய விழாவில் சக்தி மசாலா நிறுவன தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் சாந்திதுரைசாமி பயனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினர்.

Updated On :3 நவம்பர் 2021, 6:55 am

DIN


ஈரோடு: சக்தி மசாலா நிறுவனங்கள் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏழை, எளியோர் 136 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனங்கள் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து பசிப்பிணி போக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஏழை, எளிய முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 136 நபர்களுக்கு தினசரி, அவர்களின் இல்லம் தேடிச் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு 136 பயனாளிகளுக்கும் புத்தாடை வழங்கும் விழா ஈரோடு சூளையில் நடந்தது. புத்தாடைகளை சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர்  சாந்திதுரைசாமி ஆகியோர் புத்தாடைகளை வழங்கினர். 

நடுநகர் அரிமா சங்க பட்டயத் தலைவர் என்.முத்துசாமி, சங்கத் தலைவர்  டி.வாசுதேவன், செயலாளர்கள் கே.கதிர்வேல், பி.வெங்கடாசலம், பொருளாளர்  எம்.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.சிவக்குமார் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.