கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஆம்பூர் அருகே கால்நடைகளுக்கு அம்மை நோய்: மக்களே கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்கும் அவலம்

ஆம்பூர் அருகே கால்நடைகளுக்கு வேகமாக அம்மை நோய் பரவி வருவதை அடுத்து மக்களே கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

News image
அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை கால்களை கட்டி படுக்க வைத்து பின்னர் தூய்மையான தண்ணீர் கொண்டு கால்களையும் நன்கு கழுவிக் விடுகின்றனர்.
Updated On :28 ஜனவரி 2024, 4:30 am

DIN

ஆம்பூர் அருகே கால்நடைகளுக்கு வேகமாக அம்மை நோய் பரவி வருவதை அடுத்து மக்களே கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரபள்ளி, மேல்மிட்டாளம், கீழ்மிட்டாளம்,  சின்னவரிகம், ரகுநாதபுரம், மேகனாம்பள்ளி, பெரியவரிகம், கூர்மாபாளையம், அத்திமாகுலப்பள்ளி, கதவாளம், அபிகிரிப்பட்டரை போன்ற பகுதிகளில் கால்நடைகளான பசு மாடுகள் மற்றும் காளைகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாக பெய்து வரும் பருவ மழையால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஈரமான பகுதிகளில் நடமாடி வருகிறது. ஈரமான பகுதிகளில் கால்நடைகள் நடப்பதால், கால்நடைகளின் கால்களில் புண்கள் ஏற்படுகிறது. இந்தப் புண்கள் வெடித்து சீழாக வடிகிறது. கால்நடைகளின் கால்களில் சீழ் வடிவதால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் கால்நடைகள் வழியால் துடிக்கின்றன‌.

உடனடியாக தடுப்பு ஊசிகளும் மருந்துகளும் கொடுக்காத கால்நடைகள் இப்போது உயிர் இழந்து வருகின்றன.

Story image

அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை கால்களை கட்டி படுக்க வைத்து, பின்னர் தூய்மையான தண்ணீர் கொண்டு கால்களை கழுவி மஞ்சள் தூள், ரசகற்பூரம் கலந்த கலவையை புண்கள் ஏற்பட்டு உள்ள பகுதிகளில் தடவி வருகின்றனர்.

வேகமாக பரவி வரும் இந்த அம்மை நோயை கட்டுப்படுத்த கால்நடை துறையினர் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கால்நடைகளுக்கு அம்மை நோய் வருவது இப்போது வேகமாக பரவி வருகிறது.

கால்நடை துறையினர் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த அம்மை நோய்க்கு வேகமாக பரவி வருவதற்கு காரணம் என கால்நடை வளர்ப்போர் கூறுகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் கால்நடை வளர்ப்போரே வைத்தியம் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  அதன் ஒரு கட்டமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் கால்களை கட்டி படுக்க வைக்கின்றனர். பின்னர் தூய்மையான தண்ணீர் கொண்டு நான்கு கால்களையும் நன்கு கழுவிக் விடுகின்றனர். பின்னர் மஞ்சள் தூள், ரசகற்பூரம் கலந்த கலவையை புண்கள் ஏற்பட்டு உள்ள பகுதிகளில் மெதுவாக தடவி வருகின்றனர்.இது போன்ற வைத்தியம் சில கால்நடைகளுக்கு கை கொடுப்பதால் எல்லோரும் இப்போது அவரவர் கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், கால்நடை துறையினர் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கால்நடை வளர்ப்போரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.