எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவல் நிலையத்தில் மரம் சரிந்து விழுந்து 20 வாகனங்கள் சேதம்

 சென்னை பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் தூங்கு மூஞ்சி மரம் சரிந்து விழுந்ததினால் 20 வாகனங்கள் சேதமடைந்தன.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:58 pm

DIN

 சென்னை பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் தூங்கு மூஞ்சி மரம் சரிந்து விழுந்ததினால் 20 வாகனங்கள் சேதமடைந்தன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னையில் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. பலவீனமான மரங்கள் சரிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் நின்ற தூங்கு மூஞ்சி மரம் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென சரிந்து அங்கு பல்வேறு வழக்குகளுக்காக பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. இதில் 20 மோட்டாா் சைக்கிள்கள் சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படை வீரா்கள், மாநகராட்சி ஊழியா்கள் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த மரத்தை அங்கிருந்து அகற்றினா். சம்பவம் அதிகாலை நடைபெற்ால் உயிா் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இருப்பினும் மரம் விழுந்ததில் காவல் நிலையத்தின் பல்வேறு பகுதிகள், சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.