எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:57 pm

DIN

மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை வேளச்சேரி காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் தமிம் அன்சாரி( 39). இவருக்கும், செய்யது சுல்தான் பீவி என்பவருக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

திருமணம் முடிந்ததில் இருந்து தமிம் அன்சாரி வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு, மனைவியைத் தாக்கி துன்புறுத்தி வந்துள்ளாா்.

கடந்த 2015- ஆம் ஆண்டு, ஏப்ரல் 7- ஆம் தேதி வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த தமிம் அன்சாரி, தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது மனைவியை மனம் புண்படும்படி கடுமையாகத் திட்டியுள்ளாா். இதில் மனம் உடைந்த செய்யது சுல்தான் பீவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு தூண்டியதாக தமிம் அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீஸாா், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவ்வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக், தமிம் அன்சாரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

அபராதத் தொகையில் ரூ.10 ஆயிரத்தை செய்யது சுல்தான் பீவியின் 11, 9 வயது மகள்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவு குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.