கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

கனமழை எதிரொலியாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read


கனமழை எதிரொலியாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் வடகிழக்கு பருவமழையையொட்டி நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 

வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். எழும்பூர், வேப்பேரி மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார். பின்னர் மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு (நவ.8,9) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். 

சென்னை பயணத்தை தவிர்க்கவும்: மேலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை வருவதை 2 இல் இருந்து 3 நாள்கள் தவிர்க்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com