செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் 600 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1590 கன அடியாக உயர்ந்து உள்ளது.
தற்போது நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி, ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் 5 கன் மதகுகளில் 2 செட்டரின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, மற்றும் அடையாறு ஆற்றில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது ஏரியின் நீர் நிலவரம்
நீர் மட்ட உயரம் : 21.45
நீர் வரத்து : 1590 கன அடி
மொத்த கொள்ளளவு : 2973 மில்லியன் கன அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருச்சிகம் - ஜூலை மாத ராசி பலன்கள் 2026

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினியர் பணி!

நடிகர் அஜித் குமாரை இயக்குவீர்களா? இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்!

துலாம் - ஜூலை மாத ராசி பலன்கள் 2026
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



