எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மழைக்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்

மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2021, 12:32 pm

DIN

மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

► மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு காலரா, மஞ்சள் காமாலை டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும். 

► உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்து கழுவவும். 

► வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அனிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை, கால்களை சோப்பு தேய்த்து கழுவவும். 

► சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 

► சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும். பழைய உணவினை சாப்பிடுவதைத் தவிர்க்கவும் .

► திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

► காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும். சுய சிகிச்சை மருத்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

► வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திபேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும். உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.