நிரம்பும் தறுவாயில் மேட்டூர் அணை: தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நிரம்பும் தறுவாயில் இருப்பதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை சார்பில் முன்னெச்சரிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் அணையிலிருந்து எந்நேரமும் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி மூலம் உபரிநீர் வெளியேற்றப்படலாம். 

இதனால் மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என மேட்டூர் வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம்  எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் வட்டாட்சியர் ஹசினா பானு முன்னிலையில் தங்க மாபுரிபட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் நகராட்சியில் ஒலிப்பெருக்கி மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், அண்ணாநகர், குள்ளவீரன்பட்டி பகுதிகளிலும் தண்டோரா மூலம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கப்பட்டனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com