நெருங்கும் காற்றழுத்த தாழ்வு: அவசர உதவி எண்கள் அறிவித்தது காவல்துறை

கனமழை காரணமாக ஏற்படும் பிரச்னைகளுக்கு, அவசர உதவி எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.
நெருங்கும் காற்றழுத்த தாழ்வு: அவசர உதவி எண்கள் அறிவித்தது காவல்துறை
நெருங்கும் காற்றழுத்த தாழ்வு: அவசர உதவி எண்கள் அறிவித்தது காவல்துறை
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நாளை மற்றும் நாளைமறுநாள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை காரணமாக ஏற்படும் பிரச்னைகளுக்கு, அவசர உதவி எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் வரும் நாள்களில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில்,

மாநிலம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை என சுமார் 75,000 பேர்.

மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை.

சிறு படகுகளுடன் 350 கடலோர காவல் படை வீரர்கள்.

நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளை சரி செய்ய 250 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை குழுவினர்.

10 மிதவை படகுகள் மற்றும் 364 பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினர் என தயார் நிலையில் உள்ளனர்.

அவசர உதவி எண்கள்
பொது மக்கள் அனைவரும் கனமழையின் போது பாதுகாப்பாக இருக்க காவல்துறை தலைமை இயக்குநர் பொது அறிவுரைகள் வழங்கியுள்ளதோடு அவசர உதவிக்கு காவல்துறை 100, தீயணைப்புப் துறை 101, பொது எண் 112, அவசர ஊர்தி 108, காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044 24343662, 044 24331074, 044 28447701, 

044 28447703 (தொலைநகல்)

சென்னை மாநகர காவல் பொது மக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண் 044 23452380 மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எண் 044 23452359 ஆகியவற்றை அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com