கனமழை எதிரொலி: கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கோவையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை: கோவையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளை நிரமிப்பியுள்ளன. 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து கோவை மாவட்டத்தில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து ஆட்சியர் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டதால் மாணவர்கள் ஏற்கனவே பள்ளிகளுக்கு சென்று விட்டனர். விடுமுறை அறிப்பிப்பால் திரும்ப வீட்டிற்கு சென்றனர். தாமத அறிவிப்பால் மாணவர்கள், பெற்றோர்கள் சிரமங்களுக்குள்ளாகினர்.

மேலும் மாவட்டத்தில் வெள்ள அபாயம், பாதிப்புகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்க வேண்டும். மேலும் 94899 46722 என்ற வாட்ஸ் ஆஃப் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் புகாா்களை பொது மக்கள் பதிவு செய்யலாம். மேலும்  கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து மழை குறித்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com