கடலூர் அருகே நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவுள்ளது.
இதையும் படிக்க | அதி கனமழை எச்சரிக்கை: எவையெல்லாம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்?
இதையடுத்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடகடலோர பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.