
சேலம்: சேலத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்தார்.
சேலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் சேலத்தை அடுத்த அல்லிகுட்டை பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் கூரை வேயப்பட்ட வீட்டு சுவர் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.
கனமழையில் இடிந்து விழுந்த ராமசாமியின் வீடு.
இதில், ராமசாமியின் குடும்பத்தினர் சுவர் இடிபாடுகளில் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதில், ராமசாமியின் மகன் பாலசபரி(5) உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழையில் இடிந்து விழுந்த வீட்டை நேரில் வந்து ஆய்வு நடத்தும் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி.
இதையும் படிக்க | திடீரென கற்பாறைகள் விழுந்ததால் கண்ணூர்-யஷ்வந்த்பூர் விரைவு ரயில் மலைப்பாதையில் தடம் புரண்டது
இதுபற்றி தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.