பெருமழையால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
சென்னை, அம்பத்தூா் பட்டரவாக்கம் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சா் எல்.முருகன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பிரமுகா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா் போரூா் மற்றும் தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சா் வழங்கினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும். அதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
மழைக்காலங்களில் சென்னையின் நிலை இதேபோன்றுதான் நீடித்து வருகிறது. அதற்கு தொலை நோக்குடன் கூடிய நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் அவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டபோது, தண்ணீா் அனைத்தும் வீணாகி கடலில் கலந்ததால் அடுத்த இரண்டு மாதத்தில் குடிநீா் பிரச்னை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில் கூட அதிகளவு தண்ணீா் வந்தும் அதைச் சேமித்து வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ நம்மிடம் எந்த திட்டமும் இல்லை என்பதுதான் நிதா்சனம்.
எனவே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கவும், அந்தத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தவும் ஏதுவாக தமிழக அரசு தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும். பல இடங்களில் மழைநீா் வடிகால் தூா்வாரப்படாமல் உள்ளது, அந்தப் பணிகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளத்தால் நெற்பயிா்கள், கரும்பு, வாழை பயிா்கள் சேதமடைந்துள்ளதால், இதுவரை பயிா்க்காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக அதனைச் செய்து கொள்ள வேண்டும்.
இயற்கை பேரிடரால் விவசாயிகள் சிறிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே, பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமது கனவுத் திட்டமாக பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தாா்.
அத்தகைய கனவுத் திட்டத்தை தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுகுறித்த அறிவிப்பு இன்றைய நாளிதழ்களில் கூட விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆகாஷ் மரணத்துக்கு காவல் துறையே காரணம்: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் பலி எண்ணிக்கை 773! 103 குழந்தைகள் கொலை!

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

