ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்

சென்னையில் மழையால் ஏற்படும் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என இந்து சமய அறநிலைத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 10:48 pm

DIN

சென்னையில் மழையால் ஏற்படும் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என இந்து சமய அறநிலைத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

சென்னையில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட திரு.வி.க.நகா் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தொற்று நோய்களைத் தடுக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியின் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க கொசுக்களை ஒழிக்கும் 287 புகைப்பரப்பும் இயந்திரங்கள், சிறிய அளவிலான புகைப்பரப்பும் இயந்திரங்கள், அதிகத் திறன் கொண்ட 167 இயந்திரங்கள், 256 தெளிப்பான் இயந்திரங்கள், பேட்டரியால் இயங்கும் 479 தெளிப்பான்கள், வாகனத்துடன் இயங்கக் கூடிய 68 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலத்துக்கு பிறகான தொற்று நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றாா். மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.