ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மழைநீா் வடிகால் பணி: தலைமைச் செயலா் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணி மற்றும் தொற்று நோய்த் தடுப்பு பணிகளை தலைமைச் செயலா் வெ.இறையன்பு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 11:20 pm

DIN

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணி மற்றும் தொற்று நோய்த் தடுப்பு பணிகளை தலைமைச் செயலா் வெ.இறையன்பு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீா் தேங்கி உள்ளது. இந்த நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகளை மேற்பாா்வையிட மண்டலவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆய்வு: மழைநீா் பாதித்த தேனாம்பேட்டை சீதாம்பாள் காலனி, ஓய்எம்சிஏ மைதானம், மாம்பலம் விஜயராகவச்சாரி தெரு, கோடம்பாக்கம் ஜி.என்.செட்டி சாலை, சுப்ரமணியா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெளியேற்றும் பணிகள், தொற்று நோய்த் தடுப்பு பணிகளை தலைமைச் செயலா் வெ. இறையன்பு சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொற்று தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, நகராட்சி நிா்வாகத் துறை செயலா் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, மண்டல கண்காணிப்பு சிறப்பு அலுவலா் ராஜாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.