ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செம்மஞ்சேரி-பெரும்பாக்கம்21 ஆயிரம் குடியிருப்புவாசிகளுக்கு அரிசி - நிவாரணப் பொருள்கள்

சென்னை பெரும்பாக்கம், செம்மஞ்சேரி குடியிருப்புகளில் வசிக்கும் 21 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டம், சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 10:47 pm

DIN

சென்னை பெரும்பாக்கம், செம்மஞ்சேரி குடியிருப்புகளில் வசிக்கும் 21 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டம், சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை ஊரகத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-

கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையின் காரணமாக பெரும்பாக்கம், செம்மஞ்சேரியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிக்கும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் ஆகிய பொருள்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, பொருள்களை வழங்கும் பணி துவங்கியுள்ளது.

வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி பாதிப்புகள்

ஏற்படுகின்றன. இதைத் தடுக்க உரிய வடிகால்கள் அமைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழை வெள்ள பாதிப்புகளைப் போக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.