வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

16.32 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

8ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 நவம்பர் 2021, 4:21 pm

DIN

8ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வரின் உத்தரவுப் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற ஏழு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

Story image

சுமார் 12 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், இன்று (14-11-2021) நடைபெற்ற எட்டாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 5,44,809 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,87,689
பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, மற்றும் திருவள்ளுர் (பூவிருந்தமல்லி உட்பட) மாவட்டங்களில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.
மேலும், மாநிலத்தில் இன்று (14.11.2021) நடைபெற்ற எட்டாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (15.11.2021) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.