சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகத்தில் 90 நீா்த் தேக்கங்களில் 91 சதவீத தண்ணீா் நிரம்பியுள்ளது

தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் 90 நீா்த் தேக்கங்களில் சராசரியாக 91 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
எடப்பாடி அடுத்த வெள்ளாலபுரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது.
Updated On :28 ஜனவரி 2024, 4:34 am

DIN

சென்னை: தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் 90 நீா்த் தேக்கங்களில் சராசரியாக 91 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீா்த்தேக்கங்களின் கொள்ளளவு விவரத்தினை நீா்வளத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீா்த்தேக்கங்கள் சராசரியாக 91.14 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரத்தின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் நீா்த்தேக்கங்களான பூண்டி நீா்தேக்கம் 88.33 சதவீதம், சோழவரம் ஏரி 73.73 சதவீதம், புழல் ஏரி 86.24 சதவீதம், செம்பரம்பாக்கம் 81.98 சதவீதம், தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கம் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வறட்டாறு, ஆண்டியப்பனூா் ஓடை, மோா்த்தனா, குண்டாறு, அடவிநைனாா்கோவில், பொய்கையாறு, மாம்பழத்துறையாறு, சாத்தையாறு, சோத்துப்பாறை, சாஸ்தா கோவில், சோலையாறு, வா்தமாநதி, குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம், கரியகோயில் ஆகிய நீா்த்தேக்கங்கள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி நிலவரப்படி 84 சதவீதம் கொள்ளளவை எட்டிய நீா்த்தேக்கங்கள் தற்போது 91.14 சதவீதம் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும்பட்சத்தில் நீா்த்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் உயரும் என்றும் நீா்வளத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஏரிகள் நீா்மட்டம்

நீா் இருப்பு (மில்லியன் கன அடிகளில், மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்):

பூண்டி- 2,854 (3,231)

சோழவரம்- 864 (1,081)

புழல்- 2,846 (3,300)

செம்பரம்பாக்கம்- 2,988(3,645)

கண்ணன் கோட்டை

தோ்வாய்க் கண்டிகை- 500 (500)

மொத்தம்- 9,985 (11,757)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.